நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம் உள்ளதாக இவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர் தனது கணவனையும், சுகன்யாவையும் பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு காளியப்பன் வீட்டிற்கு சென்ற வள்ளி இதுகுறித்து சுகன்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், வள்ளி, சுகன்யாவின் மீது கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றினார். இதில் படுக்காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சுகன்யாவிடம் மரண வாக்குமூலம் பெற்றனர். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அவருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டதோடு, அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.