துபாயில் 2024 ஆம் ஆண்டுக்கான சைமா விருது மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது அந்த வகையில் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் விருது பெற்றுள்ளனர். அவற்றை கீழே காண்போம்,

1.சிறந்த படத்திற்கான விருது ஜெயிலர் நெல்சன் திலிப் குமார் பெற்றார்.

2.சிறந்த நடிகருக்கான விருதை பொன்னியன் செல்வன் படத்திற்காக நடிகர்விக்ரம் பெற்றார்.

3.சிறந்த நடிகைக்கான விருது அன்னபூரணி படத்திற்காக நடிகை நயன்தாரா பெற்றார்.

4.சிறந்த க்ரிட்டிக் சாய்ஸ் விருது நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்திற்காக பெற்றார்.

5.சிறந்த க்ரிட்டிக் சாய்ஸ் விருது நடிகை ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்திற்காக பெற்றுள்ளார்.

6.சிறந்த வில்லனுக்கான விருதை நடிகர் அர்ஜுன் லியோ படத்திற்காக பெற்றார்.

7.சிறந்த க்ரிட்டிக்  சாய்ஸ் இயக்குனருக்கான விருதை அருண்குமார் சித்தா படத்திற்காக பெற்றார்.

8.சிறந்த பாடலாசிரியருக்கான விருதை இயக்குனர் விக்னேஷ் சிவன் “ரத்தமாரே” பாடலுக்காக பெற்றார்.

9.சிறந்த நம்பிக்கைக்குரிய விருதை நடிகர் கவின் டாடா படத்திற்காக பெற்றார்.

10.அசாதாரணமான நடிகர் விருதை நடிகர் எஸ் ஜே சூர்யா பெற்றார்.

11.சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை யோகி பாபு ஜெயிலர் படத்திற்காக பெற்றார்.

12.சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை சரிதா ஈஸ்வரி மாவீரன் படத்திற்காக பெற்றார்.

13.சிறந்த துணை நடிகர் விருதை வசந்த் ரவி ஜெய்லர் படத்திற்காக பெற்றார்.

14. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை போர் தொழில் படத்திற்காக விக்னேஷ் ராஜா பெற்றார்.

15.சிறந்த பின்னணி பாடலுக்கான விருதை ஷான் ரோல்டன் குட் நைட் பட “நான் காலி” பாடலுக்காக பெற்றார்.

16.சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தேனீஸ்வர் மாவீரன் படத்துக்காக பெற்றார். 17.இந்த ஆண்டின் வளர்ந்து வரும் தயாரிப்பாளர் விருதை கண்ணன் ரவி இராவணன் கூட்டம் படத்திற்காக பெற்றார்.