
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிமல்ரத் நாயக் இந்திய அரசுக்கு ஒரு முக்கிய கோரிக்கை விடுத்துள்ளார். அதாவது இலங்கையின் வடக்கு பகுதியில் வாழக்கூடிய மக்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.
அப்படி இருக்கும் போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. எங்களுக்கு இந்தியா பல்வேறு வகையில் உதவி செய்வதால் நாங்கள் அதற்கு நன்றியோடு இருக்கிறோம். ஆனால் மீனவர்கள் பிரச்சனையில் இலங்கை வடக்கு பகுதியில் உள்ள மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்திய அரசு சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். மேலும் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடிக்க கூடாது எனவும், இது தொடர்பாக சட்டம் இயற்றி தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.