
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூடும்போது… கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருக்கும் போது ஒரு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சட்டமன்றத்தில்… அந்த தீர்மானத்தில் மீனவர்கள் பற்றி ஏதாவது இருக்கா ? கச்சத்தீவு எங்களுடைய தமிழ் நிலத்தின் பகுதி.எங்களுடைய தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழ் மீனவர்களுடைய வலைகள் அறுக்கப்படும். படகுகள் நாசம் ஆக்கப்படும். ஆண்டாண்டு காலம் மீன்பிடித்துக் கொண்டு இருந்தார்கள், அவர்களின் உரிமை பாதிக்கப்படும் என்ற வகையில் ஏதாவது ஒரு வரி இருந்ததா ? மீனவர்களை பற்றி ஒரு வரியுமே கிடையாது.
அந்த தீர்மானம் என்ன தெரியுமா ?
”வருந்துகிறது சட்டமன்றம்” வருத்தப்படுகின்றது. கச்சதீவை கொடுத்ததால் வருத்தப்படுகின்றார்களாம். மத்திய அரசை எதிர்த்து ஒரு கண்டனம் கூட அந்த தீர்மானத்தில் நிறைவேற்றவில்லை. அன்றைக்கு எங்களது கட்சியில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் ஆலடி அருணா, கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். இன்னைக்கும் அது சபை குறிப்பில் இருக்கு.
அதையெல்லாம் மீறி, கச்ச தீவை கொடுத்துவிட்டு, இன்றைக்கு வாய்கிழிய கச்சத்தியை மீட்போம் என்று சொல்கிறார். தேர்தல் வரும் போது, இது போன்ற பசப்பு வார்த்தைகள், ஆசை வார்த்தைகள், மக்களை மோசடி செய்கின்ற வகையில் பேசுகின்றார்.மீனவ கிட்டத்தட்ட இந்த இரண்டு வருஷ காலத்துல சொல்லண்ணா துயரத்தில் இருக்காங்க.
அம்மாவுடைய தலைமையில் அன்னைக்கு எதிர்க்கட்சியா சட்டமன்றத்தில் இருக்கும்போது… அணைக்கு நான் ஒத்திவைப்பு தீர்மானம் சட்டமன்றத்தில் கொடுக்கிறேன். மீனவர்களை பொருத்தவரை, கடல்ல எல்லை கிடையாது. கடலில் எல்லை தெரியாத காரணத்தால், காற்றின் வேகம் காரணமாக மீனை பிடிக்கும் ஆர்வத்தினால் எல்லை மீறுவது வழக்கும். இது காற்றின் வேகம் காரணமாக தெரியாமல் நடக்கும்.
அப்படி தெரியாம போற மீனவர்களுக்காக எங்களுடைய ஆட்சி காலத்துல ஒரு நிர்பந்தம் மத்திய அரசுக்கு கொடுத்துதன் அடிப்படையில் மத்திய அரசு அவர்களை கொண்டு வந்தார்கள். அப்படித்தான் நாங்க மீனவர்களை மீனவர்களை கரை சேர்த்து, கொண்டு வர முடியாத 19 படகிற்கு கூட ஒவ்வொரு படக்கும் அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்தோம்.
ஆனால் இதே சட்டமன்றத்தில் இந்த பிரச்சனை குறித்து ஒரு ஒத்திவைப்பு தீர்மானம் அன்னைக்கு நான் கொடுத்த போது, திரு. மு. கருணாநிதி முதலமைச்சர் என்ன சொன்னார் தெரியுமா ? மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள். பேராசை பிடித்ததன் காரணமாக அவர்கள் எல்லை தாண்டுகிறார்களாம்.
திமுக தமிழக மீனவர்களுக்கு இல்ல…. இலங்கைக்காக பேசக்கூடிய ஒரு கட்சி. இலங்கைக்காக பேசக்கூடிய ஒரு கட்சி. இலங்கை மக்களுக்காக பேசக்கூடிய கட்சி. இலங்கை தமிழர்கள் கூட கிடையாது, இலங்கைக்காக, சிங்களருக்காக பேசக்கூடிய ஒரு கட்சி என்றால் ? அது திராவிட முன்னேற்றக் கழகமாக தான் இருக்கு.பேராசை பிடித்த மீனவர்கள் தான் எல்லை தாண்டுகிறார்கள் என்று கருணாநிதி சொன்னது சட்டமன்ற ரெகார்டில் இருக்கு என தெரிவித்தார்.