
தமிழ்நாட்டில் மின் இணைப்புகளில் ரூ.20000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது மின் பகிர்மான கழகம். தமிழகத்தில் வீடுகள் உள்ள அனைத்து மின் இணைப்புகளிலும், மின் நுகர்வை துல்லியமாக கணக்கெடுக்கவும், மின் இழப்பை தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அதன்படி வருகிற 2026 ஆம் ஆண்டிற்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்காக தமிழக அரசு ஏற்கனவே 4 கட்டமாக ஸ்மார்ட் மீட்டர் அமைக்க அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த ரூ. 20000 கோடி செலவில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. 6 கட்டமாக மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்று கூறியுள்ளது.