சென்னையில் 160 ஏக்கர் நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி கிரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தைக்கு விடப்பட்டு மீட்கப்பட்ட அரசு புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இந்த நிலம் இருந்துள்ளது. இதனால் அங்கு பசுமை பூங்கா அமைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார். இவர் சென்னையில் இரண்டாவது மிகப்பெரிய பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து கொண்டு வருகிறது. எனவே பசுமைப் பரப்பு அமைப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி 1.03 சதுர மீட்டர் ஆக உள்ளது. மேலும் சென்னை பெருநகரில் பசுமை வனப்பகுதி, பூங்காக்கள் போன்ற இடங்களை சேர்த்து குறைந்த அளவே மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இதில் பசுமை பரப்பு சென்னையில் மிக குறைவாக உள்ளது. இந்த பசுமை பூங்காவை தமிழக அரசு ஒப்புக் கொண்டிருப்பது மன நிறைவளிக்கிறது எனவும் தெரிவித்தார்.