
தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் கலைத்திறனை ஊக்கு வைப்பதற்காக அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கலைத்திருவிழா என்பது நடைபெற்ற நிலையில் அதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளின் விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் வட்டார, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பள்ளிகளில் கலைத் திருவிழா என்பது முடிவடைந்துவிட்ட நிலையில் மாணவர்களை குஷிப்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை மற்றொரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கலைத் திருவிழா முடிவடைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக குறுவளமைய மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 22 முதல் 24ஆம் தேதி வரையும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 15 முதல் 17ஆம் தேதி வரையிலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரையும் வட்டார அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது.
அதாவது பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். மேலும் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.