தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கரூர், தேனி, நாமக்கல், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 21-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.