
தமிழக முதல்வர் ஸ்டாலின் முகச்சுதைவு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிறுமி டானியாவுக்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்-சௌபாக்கியா தம்பதியின் 9 வயது மகள் டான்யா. இந்த சிறுமிக்கு 3 வயதில் முகத்தில் கரும்புள்ளிகள் வந்த நிலையில் நாளடைவில் முகச்சிதைவு நோயாக மாறியது. பல மருத்துவமனைகளுக்கு சென்றும் சிறுமியின் நோய் சரியாகததால் முதல்வர் ஸ்டாலினிடம் தனக்கு உதவி செய்யுமாறு டான்யா சமூக வலைதள மூலம் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டு சிறுமி டானியாவுக்கு இலவச முகச்சிதைவுக்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். சிறுமிக்கு அறுவை சிகிச்சை முடிவடைந்து தற்போது அவர் முழுமையாக குணமடைந்ததால் மீண்டும் பள்ளிக்கு செல்ல இருக்கிறார். மேலும் முதல்வர் ஸ்டாலின் டானியா பள்ளிக்கு செல்வதை அறிந்து சிறுமியை வாழ்த்தி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்கு செல்ல தொடங்கிவிட்டாய் என்று நான் அறிந்தேன். ஆசிரியர்களிடம் அன்பான நண்பர்களுடனும் உன்னுடைய உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.