மத்திய அரசாங்கத்தால் பெண்களின் நலனுக்காக மகிளா சம்மன் சேமிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சேமிப்பு திட்டத்தை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளதால் 2025-ம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதியோடு முடிவடைகிறது.

இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயும் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாயும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7.5 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்திற்கு வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 40,000 ரூபாய்க்கு மேல் வருவாய் பெற்றால் அவர்களுக்கு டிடிஎஸ் வரி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.