
சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கையாக பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழரசியை திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது தலைமை ஆசிரியர் சங்கம் மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 2 அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் அரசுப்பள்ளியில் மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நடத்த அனுமதித்த அதிகாரி யார் என முறைப்படி விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
அனுமதி அளித்த கல்வித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்று தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நடவடிக்கை எடுக்கும் வரை பணியிட மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.