
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மங்குடி பகுதியில் அஜித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்(23) என்ற தம்பி இருந்துள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் ஆவடியில் இருக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இதில் அஜித்குமார் சென்னையில் இருக்கும் தனியார் மாலிலும், ராஜ் ஆவடியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆவடி-அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இருக்கும் தண்டவாளத்தை அஜித்குமார் கடந்து செல்ல முயன்றார்.
அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அஜித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.