திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மாணவிகள் கல்விக்காக தங்கி படித்து வருகின்றனர். இந்த பெண்கள் விடுதியின் அருகே கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதனை பெட்ரிக் என்ற வாலிபர் நடத்தி வருகிறார். இந்த வாலிபர் பெண்கள் விடுதியில் உள்ள ஜன்னல் வழியே பெண்களை எட்டிப் பார்த்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அதாவது பெட்ரிக் என்ற வாலிபர் விடுதியில் உள்ள அறையில் ஜன்னல் வழியாக மாணவிகளை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது அறையில் இருந்த மாணவிகளுக்கு திடீரென ஒரு ஆண் உருவம் தெரிந்தது. இதனால் பயத்தில் அலறி கத்தி கூச்சலிட்டனர். அதன் பின் உடனடியாக விடுதி காப்பாளரிடம் மாணவிகள் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து விடுதி காப்பாளர் அந்த இளைஞர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பெண்கள் விடுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.