உக்ரைன் அரசு, ரஷியா-உக்ரைன் போர் தொடர்பான சைபர் பாதுகாப்பு சிக்கல்களை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத்துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்காக வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அரசின் தகவல்களைச் சுருட்டி எடுத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷியாவுடனான போரின் பின்னணியில், டெலிகிராம் செயலி, எதிரி நாடுகள் உக்ரைனின் முக்கியமான தகவல்களை திருட பயன்படுத்தப்படுவதாகவும், இதன் காரணமாக அரசு முறைப்படுத்தல்களை இறுக்கமாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் ராணுவ புலனாய்வு துறை குறிப்பிட்டுள்ளது. சைபர் தாக்குதல்களின் பாதிப்பு அதிகமாக உள்ளதன் விளைவாக, இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியமாகக் கொண்டுவரப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு பலவிதமான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசின் இந்த முடிவு, எதிர்கால சவால்களை சமாளிக்க முக்கியமானதொரு நடவடிக்கையாகவும், தகவல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.