கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி பகுதியில் கூலி வேலை பார்க்கும் விபின் என்பவர் வசித்து வந்துள்ளார் இந்நிலையில் விபினும் அதே பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரும் செல்போன் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் காபிகாடு பகுதிக்கு சென்றனர். இருவரும் செல்போன் கடைக்கு சென்று செல்போன் ஆர்டர் செய்தனர். பின்னர் குளித்துறை பகுதியில் இருக்கும் விபின் உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

இந்நிலையில் ஆற்று பாலம் பகுதியில் சென்ற போது எதிரே பால் ஏற்றி வந்த மினி டெம்போ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விபின் பரிதாபமாக உயிரிழந்தார். இன்று காலை வினித்தும் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.