உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 1159 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்து, போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் வெற்றி கொண்டாட்டம் நடைபெற உள்ளதால் மே 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை போர் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார். அதன்படி உக்ரைன் உடனான போர் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார்.