புனேயில் நடந்து வந்த PMPML பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் கைகலப்பாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வாகோலி முதல் பேகரை நகர் வரை இயக்கப்படும் 167A எண் பேருந்தில், புதன்கிழமை காலை 9.15 மணியளவில், அமனோரா மால் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு பயணி பின்னால் உள்ள கதவின் வழியாக இறங்க முயன்ற நிலையில், PMPML விதிமுறைகளின்படி பின்வாசலால் ஏறுவது அல்லது இறங்குவது தடை செய்யப்பட்டதால், ஓட்டுநர் அவரை அடுத்த நிறுத்தத்தில் இறங்க சொல்லியதாகத் தெரிய வருகிறது.

 

இதனைக் காரணமாக கொண்டே பயணிக்கும் நபருக்கும், ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதனை பஸ் கன்டக்டர் வீடியோவாக பதிவு செய்ததும், மற்றொரு பயணி சண்டையை நிறுத்த முயற்சி செய்ததும் வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.

பேகரை நகர் டிப்போ மேலாளர் சுரேந்திர டங்காட் இந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாவது, “பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணி தன்னுடைய நிறுத்தத்தில் இறங்க தவறிவிட்டார். அடுத்த நிறுத்தத்தில் இறங்குமாறு ஓட்டுநர் கூறியதால் சண்டை ஏற்பட்டது” என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பஸ் நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து PMPML நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது