சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் பல குழந்தைகள் அதில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கட்டடத்தில் இருந்த பல குழந்தைகள் படுகாயமடைந்த நிலையில் இந்த தகவல் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் 15 குழந்தைகள் மற்றும் 5 பெரியவர்கள் உட்பட 80 பேரை உயிருடன் மீட்டனர். அவர்கள் அனைவரும் கேகே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் 10 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இதைத் தொடர்ந்து ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த நிலையில் இந்த தீ விபத்தின் போது காயமடைந்துள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் சுற்று பயணத்தில் இருந்த பவன் கல்யானுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக தனியார் விமானத்தில் சிங்கப்பூருக்கு தன் மகனை பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.