
சென்னை மாவட்டத்திலுள்ள ஐயப்பன் தாங்கலில் அடுத்தடுத்து இரண்டு இளைஞர்கள் வெட்டப்பட்டுள்ளனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அப்பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் சென்று கொண்டிருந்த தமிழ் மற்றும் சூர்யா என்ற இரண்டு இளைஞர்களையும் அடுத்தடுத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த பைக் மற்றும் கார்களையும் உடைத்துள்ளனர்.
இதுகுறித்து விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் திருட்டு மற்றும் கஞ்சா தொடர்பு உடைய தமிழ் என்பவர் பைக்கில் வந்த இரு இளைஞர்களுடன் ஏற்கனவே முன் விரோதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதனால் அந்த இளைஞர்கள் தமிழை கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளில் இரண்டு இளைஞர்களும் கொலை செய்துவிட்டு பைக்கில் தப்பி ஓடி உள்ளனர். நடுரோட்டில் இருவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.