அமெரிக்காவில் சியாட்டிலின் அருகே உள்ள பால் சிட்டியில் ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கியால் யாரோ ஒருவர் சுடுவது போன்று சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை திறந்து பார்த்தபோது அங்கு 3 குழந்தைகள் உட்பட 5 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். மேலும் ஒரு சிறுமி காயம் அடைந்து உயிரோடு இருந்தார்.

அந்த சிறுமியை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கும், இறந்த அந்த குடும்பத்தினருக்கும் இடையே என்ன சம்பந்தம் என்பது குறித்த எந்தவித தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூடு அதிகளவில் நடைபெற்று வருவது வருந்தத்தக்கதாகும்.