தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தி கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா மற்றும் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தி கோட் படம் உலகம் முழுவதும் கடந்த 5ஆம் தேதி வெளியானது.

திரைப்படத்தில் மறைந்த விஜயகாந்த் அவர்களின் முகத்தை ஏஐ தொழில்நுட்ப மூலம் நடிக்க வைத்துள்ளனர். படத்தின் தொடக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் சில நிமிடங்களில் மட்டும் நடித்திருந்தாலும் திரையரங்கையே மிரள வைத்தார். அந்தக் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் கேப்டன் விஜயகாந்துக்கு டப்பிங் கொடுத்தது ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மணிகண்டன் பல நடிகர்களை போல் பேசும் திறமை உடையவர். அதிலும் கேப்டன் விஜயகாந்தின் குரலை இத்திரைப்படத்தில் மிகவும் அச்சு அசலாக அவரின் குரலை போலவே நடிகர் மணிகண்டன் பேசி அசத்திருப்பார் . இத்தகவல் அறிந்த ரசிகர்கள் அனைவரும் நடிகர் மணிகண்டனை பாராட்டி வருகின்றனர்.