
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித். இவர் ஒரு நடிகராக மட்டுமே பைக் ரைடர், துப்பாக்கி சுடுதல், சிறிய வகை ஹெலிகாப்டர்களை செய்தல் போன்ற பல விஷயங்களில் சிறந்து விளங்க கூடியவர். நடிகர் அஜித் தன்னுடைய ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலகத்தை சுற்றிவர வேண்டும் என்று விரும்புகிறார். படப்பிடிப்பு தளத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித் பைக்கை எடுத்து கொண்டு சுற்று பயணத்திற்கு கிளம்பி விடுவார். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் நடிகர் அஜித் தன்னுடைய உலக சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்க இருக்கிறார். லைகா நிறுவனத்துடனான படத்தை முடித்த பிறகு தான் அஜித் சுற்றுப்பயணத்திற்கு செல்வார். இது ஒரு பரஸ்பர மரியாதைக்கான ரைடு. #RIDEformutualrespect என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஏகே 62 படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அஜித்தின் மேனேஜர் வெளியிட்டுள்ள தகவல் சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Mr Ajith Kumar to start 2nd leg of world motorcycling tour post completion of his project with Lyca production n wld like it to be for a cause n term it as #RIDEformutualrespect
— Suresh Chandra (@SureshChandraa) March 6, 2023