
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பல்வேறு விதமாக மோதி கொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது நடிகர் அஜித்தின் மதுரை ரசிகர்கள் நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் இன்று பேரன்பும் மிக்க ஏகே என்று மாண்புமிக்கு ஓகே என்ற வாசகம் இருக்கிறது. அதாவது நடிகர் அஜித்தை ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைத்து போஸ்டர் ஒட்டியுள்ளார்கள். மேலும் இதற்கு முன்பாக நடிகர் விஜயை ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியிருந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.