தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி நடிப்பில் சென்ற 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் “தசரா”. ஸ்ரீகாந்த் ஒடேலா டைரக்டு செய்த இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இத்திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ரூ.100 கோடி வசூலை குவித்திருக்கிறது. இந்த நிலையில் தசரா படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவானது வெளியிட்டு உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக உருவாகி உள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றர்.