இணையத்தில் தற்போது வைரலாக பரவும் ஒரு பழைய வீடியோ, ஒவ்வொருவரும் மனதை உருக்கும் விதமாக உள்ளது. அதில், திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மாணவர்கள் பீதி அடைந்து வகுப்பறையை விட்டு ஓடுகின்றனர்.

அந்த நேரத்தில், அதே வகுப்பில் உள்ள காலில் அடிப்பட்டு நடக்க முடியாத மாணவனை, மற்றொரு மாணவன் தோளில் தூக்கிச் சென்று பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார். இந்த மனிதநேயம் நிரம்பிய செயல் பலரிடமும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

X  பிளாட்ஃபாமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை 62,300-க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. “இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருக்கின்றனர் என்பதே நமக்கான நம்பிக்கையாக உள்ளது”, “அவசர சூழ்நிலையில் தன்னையே மறந்து மற்றவரை காப்பாற்றும் செயல், உண்மையான சாமான்ய வீரர் ஒருவரின் செயலாகும்”, என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வெளியாகும் நேரத்தில், ஆப்கானிஸ்தானில் ஹிந்து குஷ் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் 5.6 ரிக்டர் நிலநடுக்கமும் ஏற்பட்டது, ஆனால் அதனால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.