தமிழக பாஜக நடத்தி வரும் எண் மண், எண் மக்கள்  யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணண்மாலை,  இன்னைக்கு பெண்கள் கொஞ்சம் பேர் சந்தோஷமா இருக்கிறீங்க….  நிறைய பேரு சந்தோசம் இல்லாமல் இருக்கிறீங்க..  ஏன்? நேத்து ஒரு வீடியோ பார்த்தேன். காமெடியா இருந்தாலும், அந்த வீடியோவை சொல்லணும். ஒரு கணவர் கோவப்பட்டு மனைவிய அடிக்கிறார்,  ரொம்ப தவறு.  உடனே பக்கத்து வீட்ல ரெண்டு பேர் போய் எதுக்குய்யா உன் பொண்டாட்டிய அடிக்கிற  என்று கேட்கிறான் ? 

ஏங்க உங்க பொண்டாட்டிக்கு மகளிர் உரிமை தொகை வந்துச்சான்னு கேக்குறான்….  அந்த புருஷன் வந்துச்சுன்னு சொல்றாரு… உங்க பொண்டாட்டி வந்துச்சா ?  வந்துச்சு.. என் பொண்டாட்டிக்கு மட்டும் வரலீங்க….  எப்படிங்க  மகளிர்  உரிமை தொகை கொடுக்காம இருக்கலாம். அப்போ இவ குடும்ப தலைவி இல்லையா ? இது ஜோக்காக இருந்தாலும் கூட,  பல குடும்பத்துல இதான் நடந்துகிட்டு இருக்கு.

ஏன்னா திமுக உரிமை தொகை கொண்டு வரும் பொழுது…  அந்தப் படிவத்தில் சொன்னாங்க….  மாமியாரும்,  மருமகளும் ஒரே வீட்டில் இருந்தா நீங்க முடிவு செஞ்சுக்கோங்க யாருக்கு உரிமை தொகை வேண்டும் என சொன்னாங்க.  கொங்கு கலாச்சாரத்தின் ஆணிவேரே குடும்பம். குடும்பத்தினுடைய ஆணி வேரே  கூட்டு குடும்பம். அதுதான் கொங்கு கலாச்சாரத்தின் உடைய ஆணிவேர். அதுல மருமகளும்,  மாமியாரும்,  தாயும் ஒன்றாக  ஒரே வீட்ல தான் இருப்பாங்க.

அந்த வீட்டுக்குள்ள ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி,  இரண்டு பேருக்கும் கொடுக்க மாட்டோம்…  நீங்க முடிவு செய்ங்க  என ஆரம்பிச்சு…  முதியோர்  பென்ஷன் வாங்கினா…  கொடுக்க மாட்டோம், அது வாங்கினா கொடுக்க மாட்டேன்…. இது வாங்குனா கொடுக்க மாட்டேம்… அது வாங்கிட்டா கொடுக்க மாட்டோம்ன்னு அறிக்கையை கொடுத்து,  வெறும் 60 லட்சம் பேருக்கு தான் அறிவிச்சாங்க அதன் பிறகு நம்முடைய தலைவர் தலைவர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டத்திற்கு மேலே ஆர்ப்பாட்டம் செய்து,  60 லட்சம் இன்று 1 கோடியே 6 லட்சமாக மாறி இருக்கிறது என தெரிவித்தார்.