உத்திர பிரதேச மாநிலம் பிரோசோபாத் என்னும் பகுதியில் 5ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களை படிக்க முடியாமல் அந்த மாணவி மிகவும் கஷ்டப்பட்டார். இந்த செய்தியை அறிந்த நொய்டாவில் வசித்து வரும் 11 ம் வகுப்பு மாணவி சஞ்சனா என்பவர் தனது நண்பர்களுடன் இது குறித்து பேசினார். அதில் பார்வை குறைபாடு என்பது எவ்வளவு கடினமான ஒன்று என்றும், அது குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பார்வை குறைபாடு பிரச்சனையால் இன்று இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை இந்த குறைபாட்டில் இருந்து மீட்க நான் முயற்சி செய்ய விரும்புகிறேன் என்றும், அவர்களுக்கு சிகிச்சை செய்ய முன் வருகிறேன் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக பிரோசாபாத்தில் கண்ணாடி வளையல் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் மக்கள் கண்பார்வை குறைபாடுக்கு ஆளாகின்றனர் என்றும், அதனை உரிய சிகிச்சை மூலம் சரி செய்து அதிலிருந்து அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் கூறினார்.

அங்குள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் இருட்டில் இருக்கும் அந்த மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவது தான் எங்களது லட்சியம் என்றும் அந்த மாணவி கூறினார்.