பிரபல இந்தி டிவி நடிகை சந்திரிகா சாஹா. இவருக்கு 41 வயதாகும் நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவர் இரண்டாவதாக தொழிலதிபர் அமன் மிஸ்ரா (21) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென சந்திரிகா கர்ப்பமாகியுள்ளார். இதனால் சந்திரிகாவிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு அமன் கூறியுள்ளார்.

ஆனால் கருவை கலைக்க மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சந்திரிகா குழந்தை பெற்றுக் கொண்டார். குழந்தைக்கு 14 மாதம் இருக்கும் போது இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் குழந்தை தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமன் குழந்தையை திடீரென தரையில் மூன்று முறை அடித்து தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை நடிகை சந்திரிகா காவல் நிலையத்தில் கொடுத்து அமன் மீது புகார் கொடுத்துள்ளார். மேலும் காயத்தின் காரணமாக குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.