உத்திர பிரதேச மாநிலத்தில் ஹசன்பூர் கிராமத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்நிலையில் அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் வீட்டின் சுவர் பகுதியில் ஏறிய நிலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர்களுடைய குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் உதவியை நாடினர். பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வராததால் அந்த சிறுவனின் 11 வயது தம்பி தன்னுடைய தந்தை குப்பை சேகரிக்க பயன்படுத்தும் கைகளால் ஒட்டும் ரிக்ஷாவில் தனது அண்ணனே ஏற்றிச் சென்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது அந்த ரிக்ஷாவை சிறுவன் முன்னால் இழுத்து செல்ல, அவர்களது தாய் பின்னால் தள்ளிச் சென்றார். இந்த காட்சியை சாலையில் பயணித்தவர்கள் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து சிறுவனை  சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் உள்ளூர் சுகாதார மைய மேலாளரான டாக்டர் மனோஜ் ஷுக்லா, காயமடைந்த சிறுவன் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் அவலமான அவசரகால சுகாதார வசதிகளையும், அரசு சேவைகளின் செயலிழப்பையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது