
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூமி பட்னேகர். இவர் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை மேடையில் வந்து குத்து விளக்கு ஏற்றுமாறு கூறியுள்ளனர். உடனே நடிகை பூமி தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி விட்டு மேடையில் ஏற நினைத்துள்ளார். ஆனால் அவரால் செருப்பை கழட்ட முடியாததால் தன் உதவியாளரை அழைத்து செருப்பை கழட்டுமாறு கூறியுள்ளார்.
மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த நடிகை பூமி தன் உதவியாளரை அழைத்து செருப்பை கழட்ட வைத்த சம்பவத்திற்கு தற்போது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் உங்களிடம் சம்பளம் வாங்கினால் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய சொல்வீர்களா என்று தற்போது பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.