ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ஆம் தேதி அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலால் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மாறி மாறி சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே விரிசல்கள் அதிகரித்துள்ளது. இரு நாட்டின் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

முன்னதாக இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தடை செய்தது. இது பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ கூறியதாவது, சிந்தி நதி எங்களுடையது. எங்கள் தண்ணீர் அதன் வழியாக பாயும் அல்லது இந்தியர்களின் ரத்தம் ஓடும் எனும் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்திருந்தது. இந்நிலையில் பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு அகில இந்தியாமஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி மிகக் கடுமையாய் பதிலடி கொடுத்தார். இது குறித்த அவர் கூறியதாவது இதுபோன்ற குழந்தைத்தனமான பேச்சுக்களை மறந்து விடுங்கள். அவருடைய தாத்தாவுக்கு என்ன ஆனது என்று அவருக்கு தெரியாது?. அவருடைய அம்மா பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

தன் தாயைக் கொன்றது யார் என்று அவர் நினைக்க வேண்டும். ஒரு நாட்டிற்குள் நுழைந்து அப்பாவிகளை கொன்றால் எந்த நாடும் அமைதியாக இருக்காது. மதத்தைக் கேட்டுவிட்டு மக்களை கொள்ளும்போது மதத்தைப் பற்றி எப்படி பேசுவீர்கள்?. நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள். பாகிஸ்தான் நாட்டின் மொத்த பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டுக்கு கூட சமமாக இல்லை. அமெரிக்கா உங்களுக்கு ஏதாவது கொடுக்காவிட்டால் நீங்கள் நாட்டை நடத்த முடியாது என்று கூறியுள்ளார்.