
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜீரியாவின் வடக்கில் நைஜர் மாகாணம் அமைந்துள்ளது. இந்த நைஜர் மாகாணத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மவுலு திருவிழா பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த திருவிழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் படகில் சென்று விட்டு வீடு திரும்பும் போது மோக்வா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இச்செய்தி குறித்து அறிந்த மீட்பு படையினர் விரைந்து செயல்பட்டு 150 பேருக்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நைஜீரியாவின் தலைவர் ஜிப்ரில் அப்துல்லாஹி முரேகி தெரிவித்ததாவது, மவுலு திருவிழாவிற்கு சென்று வீடு திரும்பிய குழந்தைகள், பெண்கள் என 100 பேருக்கு மேல் ஆற்றல் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.