
இந்திய தலைநகர் டெல்லியின் வீவெக் விஹார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு பெண்ணின் சிதைந்த உடல் பெட்டின் அடியில் உள்ள பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதில் இருந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கொலைச் சம்பவத்தில், வீட்டு உரிமையாளர் விவேகானந்த் மிஸ்ரா மற்றும் கொலைக்குள்ளான பெண்ணின் கணவரின் உதவியாளர் அபய் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணின் கணவர் அசிஷ் தலைமறைவாக இருக்கிறார். போலீசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், கடந்த மார்ச் 28 அன்று வீவெக் விஹார் பகுதியில் உள்ள டிடிஏ குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்ற புகாரின் பேரில் போலீசார் வந்தபோது, வீடு வெளியிலிருந்து பூட்டப்பட்டிருந்தது. பின்பக்க கதவின் அருகில் இரத்தக்கறைகள் இருந்ததை அடுத்து, போலீசார் உள்ளே புகுந்தனர்.
அப்போது ஒரு பையில் போர்வையால் போர்த்தப்பட்ட நிலையில், ஒரு சிதைந்த உடல் பெட்டின் அடியில் உள்ள பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. விசாரணையில், 35 வயதான அஞ்சலி என்ற பெண், தனது கணவர் அசிஷ் மற்றும் மற்ற இருவருடன் தவறான உறவில் இருந்ததை கண்டு பஞ்சாபின் லூதியானாவிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றிருந்தார். பின்னர், மார்ச் 21 அன்று அசிஷ் அவரை மீண்டும் டெல்லிக்கு அழைத்து வந்தார்.
அதன் இரண்டு நாட்களுக்குப் பிறகு, அசிஷ், அபய் மற்றும் வீட்டு உரிமையாளர் விவேகானந்த் ஆகியோர் இணைந்து அஞ்சலியை கொலை செய்து, உடலை படுக்கையின் அடியில் உள்ள பெட்டியில் மறைத்து விட்டு ஜெய்ப்பூருக்கு தப்பிச் சென்றனர். அங்கு அபயின் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
வீட்டு உரிமையாளர் பின்னர் டெல்லிக்கு திரும்ப, மற்ற இருவரும் பீகாருக்கு தப்பியுள்ளனர். உடலை எவ்வாறு அகற்றுவது என திட்டமிடும் தருணத்தில், துர்நாற்றம் காரணமாக போலீசாருக்கு தகவல் சென்று அவர்களது திட்டம் தோல்வியடைந்துள்ளது. தற்போது போலீசார் தலைமறைவாக உள்ள அசிஷை கைது செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.