டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தது தொடர்பான பொது நல வழக்கில் ரயில்வே துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக பிரமாணப்  பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு ரயில் பெட்டியில் இவ்வளவு பேர் தான் பயணிக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது முன்பதிவு இல்லா டிக்கெட்டுகள் ஏன் அதிக அளவில் விற்கப்பட்டன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.