அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியேற்றத்திற்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது கிரீன்லாந்தை வாங்க முயற்சி செய்தார். ஆனால் அதற்கு டென்மார்க் அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கிரீன்லாந்து தீவை வாங்கும் தன் விருப்பத்தை அவர் தெரிவித்துள்ளார். அங்கு வசிக்கக்கூடிய மக்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மிகப்பெரிய தீவாக இருக்கும் கீரின்லாந்தின் 80% நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்கள் இடையே இந்த தீவு அமைந்துள்ளதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தீவை வாங்க ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் டென்மார்க் அரசு அதனை ஏற்காது என்றே கூறப்படுகிறது.