சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்துவருபவர் ராமஜெயம். இவர் ஹோட்டல் உரிமையாளர் ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது ஓட்டலுக்கு வந்த 2 நபர்கள் தோசை ஆர்டர் செய்துள்ளனர். தோசை வந்ததும் தோசை மிகவும் சிறியதாகவும், மெலிதாகவும் இருப்பதாக கூறி ராம ஜெயித்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வேறு 2 நபர்களை அழைத்து வந்து ராமஜெயத்தை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ராமஜெயத்துக்கு ரத்தம் வரும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து ராமஜெயம் காவல்துறையில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோசைக்காக ஓட்டல் உரிமையாளரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது