உலகம் முழுவதும் ரொனால்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ ‌ 900-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள நிலையில் ஆயிரம் கோல்களை அடிப்பதுதான் தன்னுடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார். அதன் பிறகு 2 அல்லது 3 வருடங்களில் ஓய்வு பெற்று விடுவதாகவும் கூறினார். இந்நிலையில் தற்போது ரெனால்டோ சோசியல் மீடியாவில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அதாவது இன்ஸ்டாகிராம், facebook, எக்ஸ் மற்றும் youtube பக்கங்களில் மொத்தமாக 100 கோடி ஃபாலோவர்ஸை டொனால்டோ கொண்டுள்ளார். உலகில் முதல் முறையாக சோசியல் மீடியாவில் 100 கோடி ஃபாலோவர்ஸை பெற்ற முதல் நபர் ரொனால்டோ ஆவார். அதிகபட்சமாக இன்ஸ்டாகிராமில் மட்டும் 64 கோடி ஃபாலோவர்ஸ் இருக்கிறார்கள். மேலும் வீதிகளில் இருந்த என்னை உலகின் மிகப்பெரிய உயர்த்திற்கு உயர்த்தியதற்காக நன்றி என்று ரொனால்டோ கூறியுள்ளார்.