
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். இவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாகவே சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலினுக்கு பிறகு திமுக உதயநிதி வசம் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி கூட உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவர் அரசின் திட்டங்களை ஆராய்ந்து நிதி ஒதுக்குவது உதயநிதி ஸ்டாலின் தான் என்று கூறினார். அதனால்தான் அவரை துணை முதல்வராக பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என திமுக அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து கூறி வருவதால் விரைவில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.