தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய். வெங்கட் பிரபு இயக்கிய விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. திரைப்படத்தில் 90″ஸ் முன்னணி நடிகர்களான பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த படமாக அமைந்துவிட்டது. இத்திரைப்படம் தற்போது வரை 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தி கோட் திரைப்படத்தில் திரிஷா மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார்.

அந்தப் பாடல் பெரிய அளவில் ரீச் ஆகி வருகிறது. ஆனால் த்ரிஷாவுக்கு முன் அந்த பாடலுக்கு முதலில் நடிக்க இருந்தவர் நடிகை ஸ்ரீ லீலா தான். ஏதோ சில காரணங்களால் அவர் விலகினார்.

ஒருவேளை ஸ்ரீ லீலா மட்டும் இதில் நடனமாடிருந்தால் இந்தப் பாடல் இன்னும் டாப்பிற்கு சென்றிருக்கும். மேலும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவும் அமைந்திருக்கும்.