ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனே என்னும் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபர் குடும்பத்துடன் திருப்பதியில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு நேற்று சென்றிருந்தனர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் மொத்தம் 25 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்திருந்தனர்.

அவர்கள் கோவிலில் உள்ளே காவல்துறையினருடன் நடந்து சென்ற போது கோவிலில் இருந்தவர்கள் அவர்களை அதிர்ச்சியுடன் பார்த்தனர் . தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு ஆண்கள் வெள்ளை வேட்டி அணிந்து கொண்டு கழுத்தில் தங்க நகைகளுடன் இருந்தனர். அதோடு ஒரு பெண் தங்க நிற சேலையில் நகைகள் அணிந்தபடி தனது குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். மேலும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலான நிலையில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.