
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கிய பிறகு அவரிடத்தை யார் பிடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றியைத் பெற விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் என்று அனைவரும் கணித்துள்ளனர். இவர் பல ஹிட்டான படங்களை கொடுத்து வந்த நிலையில், தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அதோடு சுதா கொங்கரா இயக்கத்திலும் நடித்து வருகிறார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் நேற்று விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தயாரான நேசிப்பாயா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய மாமனார் மனசு தங்கம். நான் ஆரம்பத்தில் வெறும் 4500 சம்பளம் தான் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என்னை இந்த அளவுக்கு என்கரேஜ் செய்து அவன் நிச்சயமாக ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில் எனக்கு பொண்ணு கொடுத்தார். அதோடு எனது குடும்பத்தையும் பார்த்துக் கொண்டார்.
அடுத்ததாக யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசிய அவர் உண்மையிலேயே ஒரு கோட் தான். பெரிய நடிகர் சின்ன நடிகர் என்ற வெறுப்பாடு பார்க்காமல் அனைத்து நடிகர்களுக்கும் ஒரே மாதிரியான ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ என்ற திரைப்படத்தின் ஒரு விழாவிற்கு மிட்நைட் சென்று கொண்டிருந்தபோது திடீரென யுவன் சங்கர் ராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டே சென்றேன். அப்போது அந்த பாடலைக் கேட்டதும் உடனே யுவனுக்கு போன் செய்து நீங்கள் மற்றும் நா.முத்துக்குமார் காம்போவில் நான் ஒரு படம் நடித்த நன்றாக இருக்கும் என்று கூறினேன். அதுவரை நான் யாருக்கும் அப்படி மிட்நைட் போன் செய்து பேசியது கிடையாது. அந்த அளவுக்கு அவருடைய பாடல் என்னை கவர்ந்தது என்று கூறினார்.