
மும்பையில் உத்திரபிரதேசம் உண்ணாவு பகுதியை சேர்ந்த இளம்பெண் (24). அப்பகுதியைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஒருவரோடு பழக்கத்தில் இருந்தார். அவரிடம் தனக்கு ஏதாவது வேலை வாங்கித் தருமாறு கூறியுள்ளார். அந்த ஜிம் முதலாளி தான் வேறு பல இடங்களில் புதிய உடற்பயிற்சி கூடங்களை திறப்பதாகவும் நல்ல சம்பளத்தில் வேலை கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை தன்னுடன் எல்லா இடங்களுக்கும் கூட்டிச் சென்றுள்ளார்.
அவ்வாறு கூறி மும்பையில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனால் கதறிய அப்பெண் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார் மேலும் இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த ஜிம் முதலாளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.