மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பெதூல் மாவட்டத்தில் முல்டாய் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒருவரை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது போன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ சந்தித்து பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார். நான் பேருந்து நிலையத்தில் தேநீர் மற்றும் சிற்றுண்டி விற்பனை செய்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய கடையில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொய்யான குற்றம் சாட்டி காவல்துறையினர் என்னை அழைத்து சென்றனர்.

அங்கு காவல் நிலையத்தில் வைத்து ஜன்னலில் கட்டி வைத்து என்னை அடித்து துன்புறுத்தினர் என்று தன் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணையின் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.