
கிராமசபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி மன்ற செயலாளருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் தங்கபாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்குதல் செய்திருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த பிள்ளையார் குளம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருவதாகவும், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின் போது விவசாயி அம்மையப்பன் என்பவரை கை மற்றும் காலால் தாக்கியதற்காக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிராமசபை கூட்டத்தின் போது நடைபெற்ற சம்பவத்திற்கு மிகவும் வருந்துவதாகவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். எனவே இந்த வழக்கிலிருந்து தன்னை கைது செய்யாமல் இருப்பதற்கு முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியை தாக்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன. பொது இடத்தில் அரசு அலுவலர், அதிகாரிகள் முன்பு கேள்வி கேட்ட விசாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.
மேலும் விவசாயி அம்மையப்பன் தலைப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊராட்சி செயலாளரான தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் ஏதுமில்லை. எனவே தங்கபாண்டியனுக்கு முன் ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவை பிறப்பித்துள்ளனர்.