
அம்பத்தூர் BLOW பேக்கேஜ் நிறுவனத்தில் தொழிலாளர்கள் இடையே திடீர் மோதல் நிலவே நிலையில் அதனை தடுக்கச் சென்ற போலீசாரை அடித்து விரட்டி வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறை கட்டுப்படுத்த சென்ற போலீசாரை வட மாநில இளைஞர்கள் ஒன்று கூடி அடித்து மண்டையை உடைத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த காட்சிகள் தற்போது வெளியாகி மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் வடக்கு தொழிற்பேட்டைக்கு உட்பட்ட வடக்கு பகுதி BLOW பேக்கேஜில் ஆயில் நிறுவனங்களுக்கு கேன்கள் உற்பத்தி செய்து சப்ளை செய்ய நிறுவனத்தில் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அது மட்டும் இன்றி குறிப்பிட்டபகுதியில் பல்வேறு நிறுவனங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். ஆயுதபூஜை தினத்தன்று தங்கள் நிறுவனத்தில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அங்கிருந்த வட மாநில இளைஞர்களும் ஒன்றாக கூடி அட்டகாசத்தில் ஈடுபட்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ சென்று பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் சரமாரியாக தாக்கி அடித்து மண்டையை உடைத்துள்ளனர். இதில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர் ரகுபதி என்பவர் பலத்த காயமடைந்து தலையில் 10 தையல் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டது, உடல் முழுவதும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
தற்பொழுது வட மாநில இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த காட்சிகளில் இரும்பு ராடு, கட்டில் கட்டை உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களுடன் கொடூரமாக காவல்துறையை தாக்கம் காட்சிகள் பதிவாகியுள்ளது. முன்னதாகவே பல்வேறு காவலர்களை அடித்து வட மாநில இளைஞர்கள் துரத்தும் காட்சியும் இதில் பதிவாகியுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கடந்த இரண்டு தினங்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது 5 பேரை கைது செய்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.