
செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழக மக்கள் மீது MGR-க்கு அவ்வளவு பிரியம். அதனால அந்த இயக்கம் இன்னைக்கு சொல்ல கூடிய முறையில் இல்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும். தலைவர் காலத்திலும் சரி…. அம்மா காலத்திலும் என்ன முறை, கையாளப்பட்டதோ, அதை நான் இருக்கும் போது நிலை நிறுத்தனும் என்கிறது தான் என்னுடைய குறிக்கோள், என்னுடைய பயணமும் அது தான். ஒரு தலைவர் எப்படி உருவாகிறார் என்றால், பணம் படைத்தவர்கள் மட்டும்தான் தலைவராக முடியும் என்பதும்….
ஒரு குடும்பம் தான் தலைவராக முடியும் என்பதையெல்லாம் முறியடிப்பதற்காகவே தான் தலைவர் தன் கட்சியை ஆரம்பிக்கும் போதே, ஒரு தலைமை தொண்டர்களால் தான் முடிவு செய்யப்பட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு போயிருக்கிறார். அதை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு மற்றவர்களுக்கு இருக்கோ, இல்லையோ… நான் இந்த இயக்கத்திற்காக தலைவருடைய மறைவிற்குப் பின் அந்த ராஜாஜி ஹாலில்…. உண்மையாக உழைத்த தலைவருக்காக…..
9 ஆண்டு காலம் அம்மா போகாத ஒரு கிராமம் கிடையாது. அந்த அளவுக்கு பயணம் செஞ்சி, பயணித்து.. தலைவருக்கு உதவியாக இருந்தார். ஆனால் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியம் ? இப்போ நிறைய மீடியா வந்துருச்சு. அப்போ வந்து அரசாங்கத்துல செய்தி பிரிவுனு இருக்கும். அவங்க கிட்ட மட்டும் தான் இந்த மாதிரி கேமரா இருக்கும். அந்த நிகழ்ச்சியை அவங்க எடுத்துருக்காங்க. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். அம்மா போயி பீரங்கி வண்டியில் ஏறி மலர் வைக்கிறதுக்கு அனுமதிக்கல. தொண்டர்களை பக்கத்துல விடல. தொண்டர்கள் யாரையும் ஒரு கட்டத்தில் எல்லாம் நிறுத்திட்டாங்க.
ஆனால் பக்கத்துல சுத்தி இருந்தவங்க, ராஜாஜி ஹால்ல… நான் ஒரு சின்ன பொண்ணு அம்மாவுக்கு துணையாக நிற்கிறேன். அங்கு இருந்தது அமைச்சர் பெருமக்கள் தான்… வேறு யாரும் அவர்கிட்ட நெருங்க முடியல. நாங்களே அம்மாவுக்கு பக்கத்தில் நிற்கும்போது, அம்மாவுக்கே அந்த இடத்துல பாதுகாப்பு இல்லை. அந்த அதுதான் உண்மை. அந்த நிலையில் ஒரு ராணுவத்தில் பணி புரியும் ஒரு அதிகாரி வந்து, நாங்க ஒரு தூண் ஓரமாக நிக்கிறோம். மணிக்கணக்கான நிக்கிறோம். ஆனால் யாருமே விடல. ஆனால் அந்த அதிகாரி பார்த்துட்டு, எங்களுடைய வண்டிக்கு வரட்டும். அப்ப நாங்க கண்ட்ரோல்ல எடுத்திருவோம். அப்போ நீங்க வந்து மலர் வளையம் வைங்கன்னு சொன்னாரு என பேசினார்.