தமிழகத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டை முன்னிட்டு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர் கட்சி தொடங்கியது குறித்து தற்போதே  எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சிக்கிறார்கள். இந்நிலையில் மத்திய மந்திரி எல். முருகன் விஜயை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, விஜய் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் பெரியார் திடலுக்கு மட்டும் நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்து பண்டிகைகளை தவிர்த்து மற்ற பண்டிகைகளுக்கு மட்டும் விஜய் வாழ்த்து சொல்வதை ஏற்க முடியாது. விஜயின் இந்த அரசியலை மக்கள் நிச்சயமாக முழுமையாக எதிர்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் எனில் அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து செல்ல கூடியவராக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு தலைவராக அரசியல் கட்சியை நிர்வகிக்க முடியும் என்றார்.