
மாமல்லபுரத்தில் குங்பூ தற்காப்பு கலை வீரரான பஞ்சாட்சரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்று நீண்ட காலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சி அளித்து வருகிறார். இவர் பெண்கள், வாலிபர்கள், சிறுவர்கள், சிறுமியர் என அனைவருக்கும் பயிற்சி அளிக்கிறார்.
இந்த நிலையில் பஞ்சாட்சரம் நோவா உலக சாதனைக்காக சுமார் 1000 மண் ஓடுகளை தொடர்ச்சியாக உடைத்தார். இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி நுழைவு இடத்தில் ஆயிரம் ஓடுகள் அடக்கி வைக்கப்பட்டது. அந்த ஓடுகளை 10 நிமிடங்களில் உடைத்து பஞ்சாட்சரம் நோவா வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்தார். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. சாதன புத்தகத்தில் இடம் பிடித்த பஞ்சாட்சரத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.