
சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்டாயுதபாணி என்ற பயணி பயணித்துள்ளார். இவர் திடீரென ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே காவல்துறைக்கு போலியான மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் தண்டாயுத பாணியை கைது செய்துள்ளனர். இதன்பின் தண்டாயுதபாணியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில், தண்டாயுதபாணி முன்பதிவில்லா டிக்கெட் வாங்கிக் கொண்டு சென்றுள்ளார்.
ரயிலில் தூங்குவதற்காக முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததாலும், அங்குள்ள பயணிகள் அவரை தூங்க விடாமல் தொந்தரவு செய்ததால் கோபத்தில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறைக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்துள்ளார். இதனை அடுத்து ரயில்வே காவல்துறையினர் தண்டாயுதபாணியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ரயிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.