ரஷ்யா உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் போரை நிறுத்துவதற்காக டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் போர் நிறுத்தம் தொடர்பான தொலைபேசி உரையாடலை மேற்கொள்வதாக இருந்தார். அதன்படி இந்த உரையாடல் மாலை 4 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில் புதின் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கினார். அதற்கு  அவர் மாஸ்கோவில் வணிக தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததால் அழைப்பு தாமதமானது என்று கூறினார்.

அழைப்பிற்கு தாமதமாக வந்தும் அதனைப் பற்றி சிறிதும் கூட கவலைப்படாமல் இருந்த அவர் அழைப்பின் போது டிரம்ப் கூறிய எதையுமே கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மணி நேரமாக புதின் உடன் பேசுவதற்காக ட்ரம்ப் காத்திருந்த நிலையில் பின்னர் அவர்கள் இருவரும் போர் நிறுத்தம் பற்றி பேச தொடங்கினர். அதன்படி 30 நாட்களுக்கு போரை நிறுத்துவதற்கு புதின் ஒப்புக்கொண்டார்.

அதோடு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் 18 அன்று உக்ரைனின் எரிசக்தி உள் கட்டமைப்புகளுக்கு 30 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தம் அறிவித்த நிலையில் தொடர்ந்து ரஷ்யா உக்ரைனில் ஸ்லோவியன்ஸ் நகரில் மீண்டும் தாக்குதல் நடத்தியது போரை முடிவுக்கு கொண்டு செல்லாமல் தொடர்வதை காட்டுகிறது. மேலும் இந்த உரையாடல் ஒரு முக்கியமான போர் நிறுத்தத்திற்கான அழைப்பாக இருந்த போதிலும் போரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் இன்னும் நடைமுறைக்கு வராமல் உள்ளது.